Showing posts with label Poem / கவிதை. Show all posts
Showing posts with label Poem / கவிதை. Show all posts

Saturday, April 24, 2010

நாடோடிகள் எனும் சகோதர சகோதரிகள்



நேற்று இரவு வந்த ஒரு குழு
அழகான ஆர்பாட்டம் கூத்தாட்டம் கும்மாளம்
அந்த ஏழ்மையின் கவர்ச்சியை ரசிக்க ஒரு கூட்டம்
ஏன் இவர்கள் பட்டம் பெற இந்த கூட்டம் உதவவில்லை

காட்டிலே வேட்டை கடந்து
நாட்டிலே போட்ட கூத்து
ரோட்டிலே வித்தை செய்ய
வீட்டிலே மாடி மேல் நின்று வீசும் காசு போறாது
இவர்கள் வீடு பெற வழி செய் அரசே

இவர்கள் பல கற்றுள்ளது இதுவும் திறமைதான்
கணிபொறி கற்கும் திறன் இருந்தும்
பிறந்த சூழலே இவர்கள் இஞக்னம்
மாறும் நாள் தொலைவில் இல்லை
என்றெண்ணி விழித்தெழுந்து பார்க்கையில்

அங்கவர்கள் இல்லை வெறும் மரத்தடிதான்
காய்ந்த சருகுகளும் எறிந்த கரியடுப்பும்
பரந்த வெளியில் பார்த்த காட்சி
பறந்ததோ பட்சிகள்
அடுத்த முறை பார் அவர்களும்
அரசர்கள் போல் ஆவார்கள்
என்றெண்ணி அமர்ந்தேனடா


Tuesday, November 10, 2009

சுகமான வலியுடன் ஒரு பயணம்


மாலையில் தேவி தியாடேர்
ரோட்டுகடை சிற்றுண்டி
47J வில் அலுவலக பயணம்
அத்தனையும் போனது ஒரு ஆகாய பயணத்தில்

என்னே இந்த தேசம்
எல்லோரு முகத்திலும் ஒரு பொய்யான புன்னகை
மாலை முழுதும் விளையாட்டு என்றான்
இங்கு அதற்கு ஒரு விண்ணப்பமாம் தேவை

சல்லிய தென்றலுடன் மலை மேனி படர்ந்து
முத்து தெளித்தார் போல் வெண் பனி
101 டால்மெய்ஷியன்ஸ் என்ற தொனி
அந்த நுரைப் பூக்களாய் ஒரு இடம் (Tahoe) வாம்

இப்படி பல இயற்கை அருளிய இடங்கள்
இருந்தும் ஏனிந்த ஒரு வெறுமை
பாசம் நேசம் இந்த தேசத்தில்
பல இடங்களில் பார்த்திராததுதான்

இருந்தும் ஏன் பாதகங்கள் பாராமல்
வலியோடு பயணிக்கின்றன
அதுவும் ஒரு சுகமே தாய் தந்தை
தமக்கை தம்பி எல்லோரும் சந்தோசப்படும்போது

பிதற்றல் இரா. சுரேசு



Monday, September 21, 2009

Birthday

Acquaintances say am getting old
When September 22 comes
Year digits swells
Energy dwindles
Am I trailing in accomplishing?

What I wanna achieve?
Nothin apart from love and friendship.
Trying to be earnest and honest always
If at all I had done anything against your wish
Offer me a chance to correct!

Who really am I? A tiny microbe “on a pale blue dot”(Carl Segan).
My desires and ambition?
I crave to spot a world of love,
Unified mankind crossing barriers
Poverty and illness must be past

What I wish become real won't you love that as well
I leave you now with these thoughts
Hope you also wish these things!
Comon.. Let’s join hands..
Nothing more I wish as gift!