Gotta boat from TN for rain support!!
https://www.facebook.com/ grsuresh/posts/ 10201206566563831
உதவ செல்லும்போது கண்ட சில காட்சிகள் எனை செவுளில் அறைந்தாற்போல் இருந்தது.
பாஸ்பரஸ் மழையால் பாதிப்படைந்த எஞ்சிய சமூகத்தை நோக்கி மழை!! யாரோ மேலிருந்து ரேடியோ பட்டனை போல் மழை பட்டனை திருப்பிவிடுகிறார்களோ என்ற ஒரு நினைவு!!!
பைலட்டிடம் பேசும்போது, நான் என் வாழ்நாளில் (30 வருட அனுபவம்) ராடார் மஞ்சளில் இருந்து சிவப்பு வந்தால் ஹர்ரிகேன் அல்லது டர்புலன்ஸ் இருக்கும். ஆனால் மழைக்காக சிகப்பை அடைந்தது இதுதான் முதல்முறை. எல்லா விமானநிலையத்திலும் ரன்வேயில் இருஓரம் மட்டும் அல்லாமல் நடுவிலும் லைட்இருக்கும். ஆனால் சென்னையில் அது இல்லை. மழையில் தரை இறங்கியது பெரும்பாடாகியது என்றார்.
காலையில் கடைக்கு சென்று அண்ணாச்சியிடம் பொருள் பெறும்போது,
எவ்ளோ அண்ணாச்சி?
6150. ஆனா 6000 கொடுத்தா போதும். 150 என்னோட கான்றிபுஷனா இருக்கட்டும் என்றது மனிதம்.
ஜூசு எங்க கிடைக்கும்?
அம்பேத்கார் தெரு பக்கத்துல பொன்னியம்மன் கோவிலுக்கு முன்னாடி என்றார்.
(இன்னொரு வளர்ந்த சரவணபவனோ விலையை 50சதவீதம் ஊயர்த்துகிறார்கள்)
அம்பேத்கார் தெருவில், கணேஷிடம் வாட்டர் பாக்கட் இல்ல. ஜூஸ் 10ரூ ஒன்னு. ஆனா உதவுவதால் குறைச்சிக்கிறேன் என்றது மனிதம்.
சரி பின்னாடி வீட்லருந்து எடுத்து வரேன். இப்படி உக்காருங்க.
பையன் மேலும் பேசினான்.
ஜேகே பர்னிச்சர் 100கிலோ சாப்பாடு போடறார். 20000ரூவா. அவர் வீட்ல இருந்தப்போ மழை கதவுகீழ வந்து நெஞ்சளவு ஏறி தப்பிச்சி வந்து இங்கனதான் இருக்கார். நகை பணம் மட்டும் இன்னைக்கி போய் எடுத்து வந்தார்.
அந்த காட்சியை போன பதிவில் வீடியோ பார்க்கவும்.
தரையில் மழை நீர், உணவளிக்க செல்லும்போது அருகில் செம்மஞ்சேரி மற்றும் அம்பேத்கார் நகர் மக்கள் திரண்டு இருந்தனர். மழை விட்டுவிட்டு பெய்து ஏளனமாக பார்த்தது. ஒரு சிறுவன் ஒரு முறை வாங்கியும் அரனாகயிற்றில் கட்டிவிட்டு மறுமுறை வந்து கேட்கையில், அருகில் இருப்பவன், அவனது சட்டையை தூக்கி காண்பித்து, மாட்டிகொண்ட சிறுவனிடம் புன்னகையுடன் மறுமுறை தந்ததும் அவனுள் ஒரு எல்லையில்லா சந்தோஷம்.
ஒரு தாய், ‘திரும்பதிரும்ப வர்றாங்க’ என்று முறையான நடைமுறை வழிமுறையில் இல்லாதாதால் பொருமினார். உண்மையாக வாழ ஆசைபடும் மனிதம்.
குழந்தைகள் அதிகம் இருப்பதை பார்த்தால் ப்ரொடெக்சன் இன்றி ப்ரோடக்க்ஷன் இருப்பதால் அரசு அவேர்நஸ்சை அதிகபடுத்த வேண்டும்.
ஒரு குழந்தையின் தாய் ஏதோ காரை நோக்கி ஓடும்போது ரோட்டில் தேங்கி இருந்த மழை நீரில் சிறு துண்டு காரட்டை அந்த குழந்தை கழுவி கடித்தது உண்மையில் மனம் கனத்தது.
இன்று போர்வை வாங்க செல்ல புறப்படுகிறேன். இறைவா இது போதும். இவர்களை விட்டுவிடு!!!
https://www.facebook.com/

No comments:
Post a Comment