Sunday, March 1, 2009

மாற்றம் காண்போம்

California Tamil Academy Drama
Matram Kanbom (மாற்றம் காண்போம்)
மாற்றம் காண்போம் இங்கே கிளிக்கவும்
Participants / Characters
1. Manikandan Somasundaram
2. Ishwar Suresh
3. Shivani Sankar
4. Prateeba Prabakar
5. Pranav Thirunavukkarasu
6. Adhith Somasundaram
7. Abhinav Anand
8. Avaneesh Murugesan
9. Urmila Venkataramani


SCENE 1 (Initial Discussion)
Monu: பிரணவ் , என்ன தணியே வர்ற
Pranav: சிறுத்தை சீறிகிட்டு வருதுல்ல
Adhith: Ishuva இன்னும் காணலியே
Pranav: அட Ishwarya Royaa
Monu: இல்லப்பா நம்ம Ishwar
Pranav: அவன் வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவான்
Ishwar, Abhinav, Avneesh are arriving the scene.
Ishu: வணக்கம் Monu, Pranav
Monu: என்னப்பா எல்லோரும் ஏன் late?
Ishu: நம்ம CTA annual day function வருது. அதுக்கு நான் coordinatora மாட்டிகிட்டேன்.
Abhinav: நானும் அவநீஷும் கூட தான் இருந்தோம்
ஆனா நாங்க வாய தொறக்கல.
Avaneesh: Ishu தான் வாய் கொடுத்து மாடினுடான்
Monu: ஐயோ ஆல விடு... போன வருஷம் நான் மாட்டிகிட்டேன். இந்த வருஷம் நீயா!
SCENE 2 (New Arrivals)
Shivani ,Prateebha and Urmila arriving the scene.
Every one: Hi Prateebha.. Hi Shivani, Hi Urmila
Monu: உங்களுக்கு ஒன்னு தெரியுமா..Ishwar CTA drama coordinator..
Shivani: Interestingaa இருக்கே
Urmila: என்ன topic
Ishu: Change
Pranav: எவலொ வேணும். 10 ரூவா, 20 ரூவா
Monu: இது அது இல்லப்பா தலைப்பு மாற்றம் காண்போம்
Prateeba: நல்ல தலைப்ப இருக்கே
Urmila: எனக்கு புரியலே
Abhinav: நான் சொல்லட்டா ‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்’. அது தான் மாற்றம்
Background song playing….விஞாணத்தை வளர்க்க போறேண்டி மேனட்டாரை
விருந்துக்கு அழிச்சு காட்ட போறேண்டி

Shivani: ஏய் நான் சொல்றேன் பாரேன். அப்போ அம்மா காலத்துல கல்லுல மாவட்டுவா..இப்போ machine வந்துருச்சு
Prateeba: I got one. அப்போ அரிசிய போடசிட்டு சமைப்பா இப்போ சமைச்சுட்டு போடைகிரா, கேட்டா Fride riceaam
Monu: இப்பல்லாம் காலைல சீரியல் திங்கறாங்க
சாயங்காலம் சீரியலையே பாக்குறாங்க
Pranav: இப்போ புரியுது. Microwave இட்லியாம். Wavela வேகவே இல்ல.
Urmila: இட்லி softaa இருக்குமா
Ishu: இட்லி சாப்டா இருக்காது வயித்துகுள்ள போய்டும்
Abhinav: ஒங்க வீட்லயும் இட்ல்யா
எனக்கு நினைவு தெரிஞ்ச நாளில் இருந்தே இட்லி தான்
எங்க அம்மாவும் அதையே சமைப்பா (Don’t think about woodwards grape water )
Avaneesh: இது என்ன ஹோர்லிக்ஸ் விளம்பரம் மாதிரி இருக்கு
Abhinav: அது ஹோர்லிக்க்ஸ் இல்ல ஹார்லிக்க்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
Urmila: குடிக்க வேணா அப்பிடியே சாப்பிடுவேன்
Shivani: ஆனா இதுல்லாம் topic இல்ல. நாம் தலைப்புக்கு வருவோம்.
Prateeba: அப்படீன்னா
Urmila: தலைல பூ வைபங்கலே அதுதான்
Shivani: அட அது இல்லப்பா, எல்லோரும் Go greenநு சொல்றாங்களே அது கூட changeதான்
Monu: பசுமை புரட்சி….
Adhith: கிளி கலர் பச்சை
வீட்ல சாபிட்றது மொச்சை
ஏன் மாமா பேரு பிச்சை
எல்லாரும் கேட்கணும் என்னோட பேச்சை


SCENE 3 (Diversion & Merge)
Urmila: பிரதீபா நீ ஏன் ரொம்ப டல்லாக இருக்கே? ஸ்டார் டெஸ்ட் நினைச்சு பயப்படுறியா?
Prateeba: அதெல்லாம் இல்லப்பா. அம்மா அப்பா ரெண்டு பெரும் இந்தியாவிற்கு சம்மர் லீவுல போகனும்னு சொல்றாங்க.
Monu: Ishwarukku CTA நாடகம் script நினச்சு பயம். உனக்கு இந்தியா ட்ரிப் நினச்சு பயம்.
Shivani: அட ஜாலி தான அதுக்கு ஏன் கவலைபடுரே?
Prateeba: ஜாலியா? இல்லவே இல்லை.அங்கே எங்கே பார்த்தாலும் ஒரே போல்லுஷன்.ரோடு ஓரமா குப்பை கொட்டுறாங்க.
Adhith: எங்கே பார்த்தாலும் கூட்டம். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
Pranaav: ஒரே வெயில் அப்பப்பா.எனக்கு இங்கே இருக்க தான் பிடிக்கும்.இங்கே அமைதியா சுத்தமா இருக்குது.
Avaneesh: வீடியோ கேம்ஸ் இருக்கு, கேம்பாய் இருக்கு. ஆனா அங்க ஒரே குப்பை ஒரே கூட்டம்
Shivani: அப்படி சொல்லாதே. எல்லா இடத்திலேயும் நம்ம நினைச்ச நல்லa மாற்றம் கொண்டு வரலாம்.
Ishu: இதையே பில்ட் அப் பண்ணி CTA நாடகமா பண்ணலாமா
Adhith: எப்படி? Etla (Telugu)? Keisey (Hindi)? Engane (Malayalam)? How?
Shivani: மாசு கட்டு படுத்தனும்
Monu: pollution control தானே. மாசு கட்டு போடணும்
Abhinav: என்னது மாவு கட்டு போடனுமா
Ishu: யாருக்கு
Shivani: மாசு. அப்படின்னா நாமே சுத்தபடுத்தனும்
Ishu: நானும் recycle பண்ணுவேன். Paper, plastic
Prateeba: சரியா சொன்ன Ishu. இத வச்சு கூட மாற்றம் கொண்டு வரலாம்

SCENE 4 (Back to Topic)
Monu: இது நல்ல topicnu நினைக்கிறேன். மாற்றம் காண்போம். அப்துல் கலாம் கூட 2020 ல இந்தியா வல்லரசா வரும்னு சொன்னார். அதுக்கு நம் பங்குக்கு நாமும் செய்வோம்
Ishu: ஆமா நம்ம விழிப்பு ஏற்படுத்தி இந்தியாவிலயும் மாசு இல்லாம மாத்தலமா
Urmila: நிச்சயமா பண்ணலாம்.
Abhinav: மாற்றம் ஒன்றே மாறாத தாயினும்
நம் தாயின் நாட்டை என்று மாற்ற இயலுமோ?
Urmila: நீ எப்ப கவிஞரா மாறின. Ok. இன்னும் ஏதும் ideas?
Pranav: பெட்ரோல் மற்றும் மற்ற எரிபொருள் குறைவா நம்ம யூஸ் பண்ணனும்.
Abhinav: அதுக்கு முழு சூரிய சக்தி(solar energy) கார் கூட வரணும்.
Ishu: அட CTA டிராமா சூப்பரா வர போது.
Avaneesh: எழுதறதுக்கு எது தேவை அதிஷ்டமா திறமையா
Abhinav: ரெண்டும் வேணாம் பேனா மை போதும்
Adhith: நாம நினச்சா சூரியனையே சுத்தலாம்
மார்சையே மாத்தலாம்
ப்லுடோல Flute வாசிக்கலாம்
Ishu: அட rhyme நல்லா இருக்கே. இரு இப்போவே எல்லாத்தையும் எழுதிகிறேன். அட, என் பேனா கானா
Adhith: ஓம் பேனா காண போன நானா பொறுப்பு.
வீட்ல எழுதி ஈமெயில் அனுப்பு.
Avaneesh: கண்ணா நாம மத்தவங்கள மாத்தறதுக்கு முன்னாடி நாம மாறனும்
நாம மாறனா மத்தவங்க தன்னாலே மாரிபோவங்கோ
Abhinav: அட சூப்பேருங்கோ
Avaneesh: இப்டி எல்லாமே மாறி மாறி போனா
சேரி கூட பாரி(ஸ்) மாறி தேறிடும்
Pranav: ஆஹா கிளம்பிட்டார்யா… கிளம்பிட்டார்யா
Ishu: அட டோபிகுக்கு வருவோமப்பா

SCENE 5 (Conclusion)
Monu: இத பத்தி நாடகத்த CTA ஒத்துக்குமா. நிறைய விதி இருக்கு. ஓவர் torture கொடுபாங்கலாமே.
Pranaav: ஆங்கில கழிப்பிடம் இருக்க கூடாது வேற
Prateeba: அது கழிப்பிடம் இல்ல..கலப்படம்
Urmila: இது பாத்தாவது வருஷம்
அவங்க உழைப்புக்கு நாம் ஒ போடுவோம் (Everyone chattering OOOO)
ஓகே சொல்லிடுவாங்க
Shivani: கண்டிப்பா ஒத்துப்பங்க. ஆனா நீங்க இந்த பஞ்சல்லாம் கட் பண்ணனும்.
Prateeba: கட் பண்ணா interest போயிறாதா
Monu: அதெல்லாம் இல்லாமலே நல்ல எழுதலாம்
Ishu: சரி. எழுதி அனுப்பறேன். ஒத்துகிட்டா நாடகத்த கலக்கிடலாம்.
Abinav: வசனமெல்லாம் ஆழமா எழுது.
Avaneesh: அப்போ கிணத்துல இருந்து கேக்கிற மாதிரி இருக்குமா
Abinav: well, நான் அத மீன் பண்ணல
Avaneesh: இப்போ நீ தானே வெள்நு சொன்ன. Oh அந்த wella..
Everyone is happy and the kids are really into something…
Background song playing…. ‘உன்னால் முடியும் தம்பி தம்பி.’