Friday, February 13, 2009

ஏன் இரத்த தானம் வழங்க வேண்டும்




இவ்வுஉலகில் ஒவ்வொரு இரண்டு விநாடி காலத்திலும் யாராவது ஒருவருக்கு அவரின் உயிர் காத்திட இரத்தம் தேவைப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டிலும் இந்தியாவில் மட்டும் 4 கோடி யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. ஆனால் கிடைப்பதோ 5 லட்சம் யூனிட்கள் தான். இரத்த தானம் வழங்கிட யாரும் முன்வருவதில்லை என்று இதற்குப் பொருள் அல்ல. பலர் தாங்கள் தானம் வழங்க தயாராய் இருக்கிறோம் என்பதனை மற்றவர்களுக்கு எப்படி அறிவிப்பது என்று தெரியாமல் இருக்கின்றனர். தகவல் தொழில் நுட்பம் உச்சத்தில் இருக்கும் இந்த கால கட்டத்தில் இந்த நிலை மாற வேண்டாமா.இதற்காகவே இருக்கிறது http://www.bharatbloodbank.com/என்ற் வலைத்தளம். இந்த தளம் மூலம் நாம் இரத்தம் தர விருப்பம் இருந்தால் இதில் பதிந்து கொள்ளலாம். இரத்தம் யாரேனும் நோயாளிக்கு வேண்டுமென்றாலும் குறிப்பிட்ட குரூப் இருக்கிறதா எனத் தேடலாம். அந்த குறிப்பிட்ட இரத்தம் தர எத்தனை பேர் தயாராய் இருக்கின்றனர் என்ற விபரமும் அவர்களின் தொடர்பு முகவரிகளும் கிடைக்கின்றன. அதன் பின்னர் அவர்களை நாம் தொடர்பு கொள்ளலாம். தொடக்கத்திலேயே எந்த நகரத்தில் இரத்தம் தேவைப்படுகிறது என்ற கேள்வி கேட்கப்பட்டு அந்த நகரத்தில் உள்ளவர்களின் முகவரி தரப் படுகிறது. ஏன் இரத்த தானம் வழங்க வேண்டும்? இரத்தம் யாருக்கெல்லாம் தேவைப்படும்? இரத்த தானம் அளிப்பவர் உடல்நிலை எப்படி இருக்க வேண்டும், இரத்தப் பிரிவுகள் என்னென்ன? இரத்தம் தானம் அளித்த உங்களின் அனுபவங் களைப் பகிர்ந்து கொள்ள இடம் இரத்த தானம் வழங்கிட டிப்ஸ் எனப் பல பிரிவுகள் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளன. அனைவரும் கட்டாயம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய, பயன்படுத்தக் கூடிய தளமாகும். அமெரிக்காவில் இருப்போர் http://www.redcross.org/ தளம் மூலம் நாம் இரத்தம் தரலாம்.

நான் சில முறை தானம் செய்திருக்கிறேன்.



1 comment:

  1. Good points and stats. I have done few times in the past. Just one time in the US. The blog makes me think about it again...

    ReplyDelete