Friday, December 18, 2015

Semmancheri distribution of toileteries

மும்மதமும் சேர்ந்து இன்று செம்மஞ்சேரி சென்றபிறகு பெருங்குடி கல்லுகுட்டை 5000 பேர் மேல் இருக்கும் குடியிருப்பு பகுதிக்கு எங்கள் வேன் சென்றது.
200 க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் உள்ளது. வாழ்பவர்கள் கீழ் நடுத்தர வர்க்கம் சேர்ந்தவர்கள்.
அவர்கள் வாழ்வதற்குரிய இடமாக மாற்ற 15 ஆண்டுகளுக்கு மேலாக போராடியது பலனில்லை.
ஏரியின் ஒரு கரையில் இருந்து மறு கரை அடைவதற்குப் thermocol படகுகள் பயன்படுத்தப்படுகின்றன.
கல்லுகுட்டையின் முக்கிய பிரச்சினைகள் ஒன்று குடிநீர். தரையில் நீர் மாசுபட்டதால் மாநகராட்சியிடம் மன்றாடியும் தண்ணீர் சப்ளை இல்லை என்றது.
எனவே அவர்கள் 12 லிட்டர் தண்ணீர் வாங்க ரூ3 செலுத்துவேண்டும் என்று ஒரூ பெரியவர் கூறினார். தற்போதைய சூழ்நிலையில் மெட்ரோ குடிநீர் தந்ததாக கூறுகிறது. இந்த பகுதியில் ரியல் எஸ்டேட் ஏற்றத்தால் புல்டோசர்கள் விட்டு அவர்களை வெளியேற்றவும் முயன்றனர் என்று மேலும் கூறினார். பல குழந்தைகள் பாம்பு கடித்து இறந்திருக்கிறது.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் குடியிருப்பவர்களை வெளியேற்றுவதற்கான முயற்சி பற்றிய குற்றச்சாட்டுகளை மறுக்கிறது. வசிப்பவர்கள் 1988ல் அண்ணா பல்கலைக்கழகம் இடத்தை வாங்கியதை அறியாமலேயே வாங்கியிருக்கிறார்கள். அரசு 50 ஏக்கர் நிலத்தில் அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், சமூக வசதிகள், மற்றும் 300 சதுர அடி அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிதருகிறோம் என்று கூறியும் மக்கள் இங்கே மிக பெரிய இடத்தில் வசிப்பதால் மேலும் மனையாக இல்லாதால் ஏற்க தயாராக இல்லை. இது ஐடி நிறுவனங்கள் மற்றும் 5 நட்சத்திர ஹோட்டல்களுக்கு வசதியாகிவிட்டது.
பிரபஞ்சத்தில் ஆண்டாளுக்கு ஒரு கல்லுக்கோட்டை, திருவாய்மொழிக்கு ஒரு கல்லுக்கோட்டை என்று இருக்கிறதாம். அதை யாரும் எளிதில் உடைக்க முடியாதாம்.
இங்கு ஒரு கல்லுகுட்டை மக்களுக்கு வழி பிறக்குமா?
கல்லுகுட்டை போல் இருக்கும் வரை நம்மை மேலைநாடுகள் பழிப்பதில் தவறில்லை. வல்லரசாகிவிடுமா??

Thursday, December 17, 2015

Gotta boat from TN for rain support!!
https://www.facebook.com/grsuresh/posts/10201206566563831
உதவ செல்லும்போது கண்ட சில காட்சிகள் எனை செவுளில் அறைந்தாற்போல் இருந்தது.
பாஸ்பரஸ் மழையால் பாதிப்படைந்த எஞ்சிய சமூகத்தை நோக்கி மழை!! யாரோ மேலிருந்து ரேடியோ பட்டனை போல் மழை பட்டனை திருப்பிவிடுகிறார்களோ என்ற ஒரு நினைவு!!!
பைலட்டிடம் பேசும்போது, நான் என் வாழ்நாளில் (30 வருட அனுபவம்) ராடார் மஞ்சளில் இருந்து சிவப்பு வந்தால் ஹர்ரிகேன் அல்லது டர்புலன்ஸ் இருக்கும். ஆனால் மழைக்காக சிகப்பை அடைந்தது இதுதான் முதல்முறை. எல்லா விமானநிலையத்திலும் ரன்வேயில் இருஓரம் மட்டும் அல்லாமல் நடுவிலும் லைட்இருக்கும். ஆனால் சென்னையில் அது இல்லை. மழையில் தரை இறங்கியது பெரும்பாடாகியது என்றார்.
காலையில் கடைக்கு சென்று அண்ணாச்சியிடம் பொருள் பெறும்போது,
எவ்ளோ அண்ணாச்சி?
6150. ஆனா 6000 கொடுத்தா போதும். 150 என்னோட கான்றிபுஷனா இருக்கட்டும் என்றது மனிதம்.
ஜூசு எங்க கிடைக்கும்?
அம்பேத்கார் தெரு பக்கத்துல பொன்னியம்மன் கோவிலுக்கு முன்னாடி என்றார்.
(இன்னொரு வளர்ந்த சரவணபவனோ விலையை 50சதவீதம் ஊயர்த்துகிறார்கள்)
அம்பேத்கார் தெருவில், கணேஷிடம் வாட்டர் பாக்கட் இல்ல. ஜூஸ் 10ரூ ஒன்னு. ஆனா உதவுவதால் குறைச்சிக்கிறேன் என்றது மனிதம்.
சரி பின்னாடி வீட்லருந்து எடுத்து வரேன். இப்படி உக்காருங்க.
பையன் மேலும் பேசினான்.
ஜேகே பர்னிச்சர் 100கிலோ சாப்பாடு போடறார். 20000ரூவா. அவர் வீட்ல இருந்தப்போ மழை கதவுகீழ வந்து நெஞ்சளவு ஏறி தப்பிச்சி வந்து இங்கனதான் இருக்கார். நகை பணம் மட்டும் இன்னைக்கி போய் எடுத்து வந்தார்.
அந்த காட்சியை போன பதிவில் வீடியோ பார்க்கவும்.
தரையில் மழை நீர், உணவளிக்க செல்லும்போது அருகில் செம்மஞ்சேரி மற்றும் அம்பேத்கார் நகர் மக்கள் திரண்டு இருந்தனர். மழை விட்டுவிட்டு பெய்து ஏளனமாக பார்த்தது. ஒரு சிறுவன் ஒரு முறை வாங்கியும் அரனாகயிற்றில் கட்டிவிட்டு மறுமுறை வந்து கேட்கையில், அருகில் இருப்பவன், அவனது சட்டையை தூக்கி காண்பித்து, மாட்டிகொண்ட சிறுவனிடம் புன்னகையுடன் மறுமுறை தந்ததும் அவனுள் ஒரு எல்லையில்லா சந்தோஷம்.
ஒரு தாய், ‘திரும்பதிரும்ப வர்றாங்க’ என்று முறையான நடைமுறை வழிமுறையில் இல்லாதாதால் பொருமினார். உண்மையாக வாழ ஆசைபடும் மனிதம்.
குழந்தைகள் அதிகம் இருப்பதை பார்த்தால் ப்ரொடெக்சன் இன்றி ப்ரோடக்க்ஷன் இருப்பதால் அரசு அவேர்நஸ்சை அதிகபடுத்த வேண்டும்.
ஒரு குழந்தையின் தாய் ஏதோ காரை நோக்கி ஓடும்போது ரோட்டில் தேங்கி இருந்த மழை நீரில் சிறு துண்டு காரட்டை அந்த குழந்தை கழுவி கடித்தது உண்மையில் மனம் கனத்தது.
இன்று போர்வை வாங்க செல்ல புறப்படுகிறேன். இறைவா இது போதும். இவர்களை விட்டுவிடு!!!

Monday, December 7, 2015

இன்று DLF முழுதும் சுற்றுப்பயணம் மற்றும் சிறுதாவூர் வரை பாதிக்கப்பட்டவர்களை தேர்ந்தெடுத்து போர்வையை அளித்தோம். இவர்கள் வீட்டை சுற்றிலும் தண்ணீர். நமது நண்பரின் இராணுவ உடையை இரவல் பெற்று அணிந்தது ஒரு கம்பீரத்தை தந்தது.

Wednesday, January 21, 2015

குமார் என்ற இந்த ட்ராஃபிக் சார்ஜண்ட் சென்னை சோலிங்கநல்லூர் லிங்க் ரோட் சந்தித்துக்கொள்ளும் பிஸியான பகுதியில் அவரது கடமை உணர்வுடன் கண்ட்ரோல் செய்து கொண்டிருந்தார். அவரை ஓரிருமுறை பார்த்து கொண்டிருந்தேன். இவரது எந்தூவை பார்த்து ஒரு நாள் இவரை சந்திக்க ஆவலாய் இருந்தேன். எல்லோரும் போல இல்லாமல் தனக்கென ஒரு பாணி கொண்டு மிகுந்த உற்சாகத்துடன் இந்த பணியை செய்கிறார். ஒரு ப்யூடி என்னவென்றால் கடந்த ஞாயிற்று கிழமை மார்க்கெட் சென்றபோது தற்செயலாக இவரை சந்திக்க நேர்ந்தது. அங்குள்ள காய் கறி கடாய் வைத்திருக்கும் சரவணன், முருகன், அமல்ராஜ், அசார், அன்சாரி எல்லோருக்கும் இவர் பரிச்சயம். எல்லாரும், நல்ல மனுஷன் சார் அவர் என்று ஒரு சேர கூறினார்கள்.
என்னை கண்டதும் நேராக வந்தார். பிடித்த கையை விடவே இல்லை. நான், சார், இவ்வளவு டென்சனான ஜாபை எப்படி சார் இப்படி சிரித்துக்கொண்டே செய்கிறீர்கள் என்று கேட்டேன். சார், அமெரிக்காவில் ஒரு போலீஸ் அதிகாரி இறந்த போது அவ்வளவு கூட்டம். ஒரு போலீசுக்கு இவ்வளவு கூட்டமா என்று அவரை பற்றி படித்த போது என் மனது மாறியது. அவரின் நற்பண்புகள் (Being Responsible) அவரை ஒரு மதிக்கதக்க மனிதராக மாற்றியிருக்கிறது. அன்றிலிருந்து நான் எப்பொழுதும் ஒரு பாசிட்டிவ் ஆட்டிட்யூட் உடன் இந்த வேலையை செய்கிறேன் என்றார். இவருக்கு மூன்று குழந்தைகள். ரஜினிகாந்த் ஒரு படத்தில் ட்ராஃபிக் கண்ட்ரோல் செய்வார். அது போல் சிரித்த முகத்துடன் இவர் டிராஃப்ஃபிகை கண்ட்ரோல் செய்வதை நீங்கள் காணலாம்.
அது மட்டுமின்றி கவுன்செலிங்க், படிப்பு இன்ன பிற உதவிகள் என்று சகலமும் செய்கிறார். இவருடன் பேசிக்கொண்டிருந்தால் நேரம் வாகனங்களை விட வேகமாக ஓடுகிறது. ஆனால் இவரின் எனர்ஜி மட்டும் குறையாமல் அதே புன்முரவலுடன் பாஸிட்டிவா வருகிறது. ஒரு விலகப்போகும் தம்பதியை உறவு முறைகள் முக்கியத்துவம் குறித்து பேசியே சேர்த்து வைத்திருக்கிறார். சாதி மாதம் பாகுபாடு எல்லாம் இல்லாமல் எல்லோரிடத்திலும் பழகும் நல்ல மனிதர்.
இந்த வேலையில் ஏகபட்ட தொல்லை இருக்கும். சிக்னல் மாறினாலும் அப்போதுதான் ஒருவன் வேகமாக நாசா லாஞ்ச்க்கு நேரமாகிவிட்டது, இவன்தான் போயி இக்நைட் பண்ணனும்ன்ற அளவுக்கு பறப்பான். குமாரோ அவனை நிறுத்தி, தம்பி, நோ, நோ, பேக்க்ல போ என்று சொல்லும்போது ரிவர்ஸ் செய்வதை பார்த்திருக்கேன். ஒரு பெரியவர் ரோட்டை க்ராஸ் செய்த போது ஓடிச்சென்று, ஐய்யா, என்னங்கைய்யய்யா அவ்வளவு அவசரம் என்று அவரின் கரம் பற்றி ஓடிப்போய் அவரை எதிர்முனையில் விட்டார். இது போல் நித்தம் ஒரு நிகழ்ச்சி. இந்த பகுதியில் வந்தால் நீங்களும் இவரை வாழ்த்தலாமே!!!