Sunday, July 23, 2017

ஐஷ்வர் சுரேஷ் பிறந்த ஒன்னரை வயதில் ஒரு மெக்ஸிகன் வீட்டில் விட்டு விட்டு நானும் என் மனைவியும் வேலைக்கு செல்ல வேண்டும். விடும்போது அழுது கொண்டு ஓடி வருவான். எனக்கு பார்க்க பலம் இல்லாததால் பை சொல்லாமல் மறைந்து விடுவேன். அவனது ஒன்பது வயதில் ஒரு சுற்றுலா கிளம்பினோம். அதன் அடுத்து நடந்த நிகழ்சிகள் இங்கே பகிர்ந்துள்ளேன்.
https://grsuresh.blogspot.com/2008/05/tribute-to-my-dad.html
I want to see thatha right now என்று அவன் உணர்ச்சி பீரிட்டு கத்தியது உடனே இந்தியா வரவேண்டும் என்று எண்ணத்தை விதைத்தது. அவனும் பாட்டியுடன் இருப்பது, எல்லோரும் வெகு நல்ல நிலையில் இருந்து அப்படியே துறந்து இங்கு வர எத்தனித்தது. இந்தியா அவன் பதினான்கு வயதில் வந்தும் ஒரு குறையும் இன்று வரை கூறியதில்லை. இங்கு கேம்ப்ரிட்ஜ் ஏ லெவல் கல்வி முறை (மற்ற ஸ்டேட், மெட்ரிகுலேஷன், ஐசிஎஸ்இ, சிபிஎஸ்இ விட சிறிது கடினம்) எடுத்து பயின்றான். இந்த முறையில் பதினொன்று மற்றும் பனிரெண்டு இரண்டும் குழு(board) பரீட்சை. இரண்டும் சேர்ந்து முடித்தால் தான் மேல்நிலைபள்ளி முடித்ததாகும். நாளை குழு பரீட்சை நடக்க இருக்கும் போதுதான் தம்பி வீட்டிற்கு சிதம்பரம் சென்ற என் அம்மா மாரடைப்பில் தவறியது தெரிய வந்தது. என்ன செய்வதென்று புரியாமல் முன்பின் பார்த்திராத கேரளா மாநிலத்தை சேர்ந்த அவனது பள்ளிதோழனின் தாயார் வீட்டிற்கு இரவு 12 மணியளவில் மூன்று வாரத்திற்குரிய துணிகளுடன் கூட்டி சென்று இறக்கிவிட்டேன். திதி முடியம் வரை திருச்சியில் இருக்கவேண்டுமென்ற காரணத்தால். என்ன படிப்பான், எப்படி படிப்பான் என்ற உணர்வு எல்லா பெற்றோர்களுக்கும் இருப்பதுபோல் இருந்தது. அதன் விடை கீழ்காணும் ஒளியிழையில்.
https://youtu.be/0cD-iLtcY60
இந்த சம்பவங்களினால் மருத்துவம் பயின்றால் ஒரு வேலை காப்பாற்றலாமோ என்ற எண்ணம் அவனுள் விதைவேறாகி செடியாகியது. அடுத்து இங்கு மேற்படிப்பா அல்லது அவன் பிறந்தஊரிலா என்ற குழப்பம் துளிர ஆரம்பித்தது. இங்கு படித்தால் எங்களுக்கு வசதியாக இருக்கும் என்றாலும் அவன் விருப்பத்தில் குறுக்கிட விரும்பவில்லை. ஆனால் அவனுக்கும் எங்கென்றாலும் சரிதான் என்றே மனநிலை. அங்கு என்றால் சாட் என்ற தேர்வில் நல்ல மதிப்பெண் பெறவேண்டும். அதன் பிறகு சப்ஜெக்ட் சாட் என்ற இரண்டு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறவேண்டும். இடையில் வாய்பேச்சு போட்டியில் தாய்லாந்து சென்று கலந்து வெற்றி பெற்று ஏல் பல்கலைகழகத்திற்கு தேர்வுற்றிருந்தான். சாட் கடந்த அக்டோபரில் நாங்கள் திருச்சியில் அம்மாவின் ஒரு வருட நினைவிற்காக இருக்கும்போது அவன் தன் ஆசிரியை வீட்டில் தங்கி எழுதினான். அதிலும் நன்மதிப்பெண் பெற்றான். பிறகு குழு பரீட்சை ஒரு மாதம். இது முடிந்தவுடன் சப்ஜெக்ட் சாட் மற்றும் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் இரு மாதம். அங்கு விண்ணப்பிக்க ஒவ்வொரு கல்லூரிகளுக்கும் நீங்கள் வேறு வேறு கட்டுரைகள் அவர்கள் கேள்விக்கேற்ப எழுத வேண்டும். கட்டுரை மற்றும் ஆசிரியர்கள் மாணவர் பற்றிய கடிதம் மற்றும் இதர சாட், போர்டு பரீட்சை மதிப்பெண்கள் எல்லாவற்றையும் பார்த்து கல்லூரிக்கு அழைப்பு விடுப்பார்கள். இதில் ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தில் நேர்முகத்தேர்வு அழைப்பு வந்தது. இங்கு ஒரு காபிடேவில் ஒருமணிநேரம் நடந்து அதில் கிடைக்கவில்லை. சிகாகோ (ரகுராம்ராஜன் அங்குதான் பேராசிரியராக இருக்கிறார்) மற்றும் பேலர்பல்கலைகழகத்தில் காத்திருக்கும் பட்டியலில் இருந்தது. வேறு சில கல்லூரிகளில் கிடைத்தாலும் விருப்பமில்லை.
கண்டுபிடித்த சூத்திரம் (Formula) http://ishwarsuresh.blogspot.com/2016/11/voltage-across-capacitor-voutvin1.html
இதன் இடைப்பட்ட நேரத்தில் நீட் மற்றும் ஜிப்மர் மற்றும் எய்ம்ஸ் மருத்துவ படிப்புக்கு நுழைவுதேர்வு படிப்பு. இதன் சிலபஸ் மற்றும் ஏ லெவல் சிலபஸ் வேறுவேறு. ஆனாலும் பதினொன்று மற்றும் பனிரண்டாம் வகுப்பு அறிவியல் அனைத்தையும் புத்தகங்கள் படித்தாக வேண்டும். fb, whatsapp இவற்றை முற்றிலுமாக தவிர்த்து படிக்க ஆரம்பித்தான். இதனிடையே சிகாகோ கிடைக்காவிடினும் பேலர் நியூரோசயின்ஸ் கிடைத்தது. இந்தியாவில் கல்லூரி தேர்வு பார்த்த பிறகு எதில் போகலாம் என்று நினைத்திருந்தாலும் கீழே உள்ள அளவிற்கு ரியாக்க்ஷன் காட்டவில்லை.
https://www.facebook.com/61388081925/videos/10155179780331926/
கோச்சிங் ஏதும் சேராமல் என்சர்ட் புத்தகம் படித்து ஜிப்மருக்கு அதிகம் உழைத்து சிங்கள் டிஜிட் மதிப்பெண்ணில் கிடைக்கவில்லை. நிகர்நிலை மருத்துவ பல்கலைகளுக்கு மத்திய அரசு கமிட்டி மூலம், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் முதல் சுற்றில் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவகல்லூரியில் இடம் கிடைத்திருக்கிறது. ஒரு சிறு தன்னிறைவு இருந்தாலும் இன்னும் போகும் பாதை வெகுதூரம். எது சரி எது தவறு என்று தெரியவில்லை. மருத்துவம் ஒரு மகத்தான சேவை. இயற்கையிலேயே உதவும் குணம் அவனிடம் உள்ளது. இவனை தூண்டிய மருத்துவபடிப்படிப்பிற்கு காரணமாயிருந்த தத்தா பாட்டி அவர்கள் இல்லாவிடினும் அவர்கள் ஆசிர்வாதம் இருக்கும். பெரியோர்கள் ஆசியுடன் உங்களது ஆசியையும் வழங்குமாறு சிரம் தாழ கேட்கிறேன்.
 — with Ishwar Suresh.

Saturday, July 15, 2017

சோழிங்கநல்லூர் குடியிருப்பில் சாலை வசதி, மரம் நடுதல், மக்கும் மற்றும் மக்கா குப்பை பிரித்தல், பகுதியை அழகு படுத்துதல், dlf சுங்கவரி விலக்கு என்று பலவற்றை சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் அவர்களை சந்தித்து உரையாடினோம்.

எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டு தனது அனுபவத்தையும் பகிர்ந்து தீர்வுகளுக்கு தனது ஒப்புதலையும் கூறி, நாங்கள் இருக்கும்போதே மாநகராட்சியிடம் தொலைபேசியில் சாலை வசதிக்கு துரித நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டதற்கும் நன்றி.

Guru Murugesh, Ramaswamy Rangachari and myself met our MLA Mr. Aravind Ramesh and put forth issues such as road, composting, tree plantation, dlf tollgate pass etc., He has promised, those will be taken care. He even spoke to corporation in front of us and requested to speed up laying road in our area.⁠⁠⁠⁠
Very positive meeting indeed. He seems to know much more about waste management than some of us. Shared his experience and assured on helping in those issues. Appreciate his time and cooperation.

Friday, January 6, 2017


என் மனைவியின் தாத்தா சேதுராமன் 1920 வருடம் மயிலாடுதுறையில் குருசாமி அவர்களுக்கு மகனாக பிறந்தார். இவருக்கு சிறுவயதிலேயே உடற்பயிற்சியில் ஆர்வம் அதிகமாக இருந்தது. இவர் குடும்பத்தினர் மரவாடி (Timberyard) வைத்திருந்தார்கள். அதனருகிலேயே உடற்பயிற்சிக்காக இவர் ஜெயமாருதி எனும் பயிற்சி கட்டிடத்தை தோற்றுவித்தார். 1940களில் தனக்கு அப்பாதுரை என்பவரை குருவாக கொண்டு மேலும் பயிற்சி பெற்றார். 

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/All-sports-must-get-the-same-importance-as-cricket-Ansari/article15307753.ece

1950ல் தேவன்குடியை சேர்ந்த மைனர் வேணுகோபால மழவராயர் தங்கை பாஞ்சாலியை மணமுடித்தார். பாஞ்சாலி என்ற பெயர் பிடிக்காததால் சரோஜா என்றே கூப்பிடுவார். இந்த தம்பதியினருக்கு வாசுகி என்ற மகளும் இருமகன்களும் பிறந்தனர். வாசுகியின் இரண்டாவது பெண்தான் எனது மின்சாரம். ஒரு முறை நான் 10 கிலோ தம்பெல் எடுத்து சீன் போட்டபோது குறுக்கே வந்த மனைவி உங்களுக்கு விளையாட வேறேதும் இல்லையா என்று சுண்டுவிரலால் தட்டி விட்டு சென்றதை பார்த்து அதிர்ந்தேன். ஜீன்லையே பளுதூக்குதல் இருப்பதால் நான் என்னதான் கராத்தே கருப்பு பெல்ட் வாங்கியிருந்தாலும் எப்போதும் அடக்கியே வாசிப்பது வழக்கம். 
சேதுராமன் தமிழ்நாட்டில் பல போட்டிகளில் கலந்து கொண்டு பல வெற்றிகளை குவித்திருக்கிறார். 1952 ஒலிம்பிக்ஸ்ல் இந்தியாவின் சார்பாக சென்று நான்காம் இடத்தை பெற்றார். அந்த வருடம் பிரதமமந்திரி ஜவஹர்லால் நேருவின் கையால் கேடயம் பெற்றார். 

https://en.wikipedia.org/wiki/S._G._Sethuraman 

அதன் பிறகு தமிழ்நாட்டின் பல இடங்களுக்கு போட்டியின் தலைவராய் இருந்து பல இளைஞர்களை ஊக்குவித்திருக்கிறார். நான் அவரை பார்க்க சென்றபோது உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால் எனையும் அவர் மாணவனாக நினைத்து தினமும் பயிற்சி செய்கிறாயா, தவறாமல் பயிலகத்துக்கு வரவேண்டும் என்று அறிவுரை வழங்கினார். 

https://en.wikipedia.org/wiki/Weightlifting_at_the_1951_Asian_Games 

நல்ல வசதிகளும் நல்ல பயிற்சியாளரும் இருந்திருந்தால் தமிழ்நாட்டில் அந்த வருடமே தங்கபதக்கத்தை வென்றிருப்பார். ஒரு வேலை அவரிடம் நான் மாணாக்கனாக இருந்திருந்தால் நானும் நம் நாட்டிற்கு ஒரு பதக்கம் வென்றிருப்பேன் என்று என் மனைவி கூறுவார். Dangal Effect?

மயிலாடுதுறை சந்திப்பு (junction) ரயில் நிலையத்திலிருந்து வெளியில் வந்தால் விநாயகர் கோவில் எதிரேயே முதல் வீடுதான் இவர் வீடு.