Saturday, April 24, 2010

நாடோடிகள் எனும் சகோதர சகோதரிகள்



நேற்று இரவு வந்த ஒரு குழு
அழகான ஆர்பாட்டம் கூத்தாட்டம் கும்மாளம்
அந்த ஏழ்மையின் கவர்ச்சியை ரசிக்க ஒரு கூட்டம்
ஏன் இவர்கள் பட்டம் பெற இந்த கூட்டம் உதவவில்லை

காட்டிலே வேட்டை கடந்து
நாட்டிலே போட்ட கூத்து
ரோட்டிலே வித்தை செய்ய
வீட்டிலே மாடி மேல் நின்று வீசும் காசு போறாது
இவர்கள் வீடு பெற வழி செய் அரசே

இவர்கள் பல கற்றுள்ளது இதுவும் திறமைதான்
கணிபொறி கற்கும் திறன் இருந்தும்
பிறந்த சூழலே இவர்கள் இஞக்னம்
மாறும் நாள் தொலைவில் இல்லை
என்றெண்ணி விழித்தெழுந்து பார்க்கையில்

அங்கவர்கள் இல்லை வெறும் மரத்தடிதான்
காய்ந்த சருகுகளும் எறிந்த கரியடுப்பும்
பரந்த வெளியில் பார்த்த காட்சி
பறந்ததோ பட்சிகள்
அடுத்த முறை பார் அவர்களும்
அரசர்கள் போல் ஆவார்கள்
என்றெண்ணி அமர்ந்தேனடா


1 comment:

  1. மிகவும் அழகாக சொல்லி இருக்கிறீர்கள் .அருமை பகிர்வுக்கு நன்றி !

    ReplyDelete