Thursday, December 16, 2010

Maa..- on brother's valaikappu

Maa,
            I heard that you had a wonderful valaikappu from all your friends. I had a full fun time, listening to bangles, music and chats. Though I couldn’t see the garland, bangles, plait, saree and others from inside, I still ate a lot of tasty food that you fed me made by your wonderful friends. I can’t wait to see the pictures, video after three months. You were discussing with Paa that your Bils, Sils and friends took so much effort to bring this event for me. I want to thank all Anandhi Suresh’s friends.

The memory of my baby shower
will always be a treasure.
Makes me think how much
effort that I can barely measure
All these happened without
additional pressure
Thanks so much for coming,
It was such a pleasure!

Naan yen ippadi pesarennu ketta, engappa, perippaas niraya TR dialogues pottu paudutharaanga. Appadi oru flowla vandadhudaan..

Nandri

Ippadikku

Paappaa

Friday, October 15, 2010

எங்கள் வீட்டு கடைக்குட்டி

வீட்டில் மூத்த குழந்தைகளுக்குப் பொறுப்புணர்ச்சி நிறைய இருக்கும். பெரும்பாலும் அப்படித்தான். ஆனால் கடைசிக் குழந்தைகள் அறிவுணர்ச்சி நிறம்பியதாக இருக்கும். அதனால்தான் கடைக்குட்டி செல்லக்குட்டி என்று கொஞ்சுகின்றார்கள். மூத்தபிள்ளை மீது தாய்க்குப் பாசம் நிறைய இருக்கும். ஏன் தெரியுமா? தான் வயிறு விளங்க வைத்த குழந்தையல்லவா. ஆனால் கடைசிக் குழந்தை மீது தந்தைக்குப் பாசம் இருக்கும். தான் இன்னமும் ஆண்மையோடு இருப்பதை உணர்த்திய குழந்தையல்லவா!


திருவாரூரில் கிருபானந்தவாரியார் பாரதம் சொல்லிக் கொண்டு இருந்தார். சகாதேவன் பற்றி சொல்ல வேண்டி வந்தது. " சகாதேவன் கடைசிப் பிள்ளை. கடைக்குட்டி. அவன் சிறந்த ஞானி. பொதுவாகவே கடைக்குட்டிகள் ஞானியாக இருப்பார்கள். கரணம் அப்பனுக்கு ஞானம் வந்த பிறகு பிறக்கிறவன் கடைக்குட்டி பிள்ளை :) அல்லது இவன் பிறந்த பிறகு அப்பன் ஞானியாகி விடுவான் . என்ன ஞானம் என்கிறீர்களா? இனி குழந்தை பெறவே கூடாது என்ற ஞானம்."

இவ்வாறு விளக்கிய வாரியார்.. கூட்டத்தினரை பார்த்து " இங்கே யாராவது கடைக்குட்டிப் பிள்ளைகள் இருக்கிறீர்களா ?" என்று கேட்டார். 10 அல்லது 15 சிறுமியர்கள் எழுந்து நின்று தாங்கள் கடைக்குட்டிகள் என்றார்கள்.

வாரியர் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்துவிட்டு. " உட்காருங்கப்பா! யார் எந்த விஷயத்தை முடிவு செய்றதுன்னு விவஸ்தையே கிடையாதா? அம்மா அப்பா என்ன முடிவுல இருக்காங்களோ :)) வீட்டுக்கு போய் உதை வாங்காதீங்கப்பா" என்றார். எல்லோரும் வாய் விட்டு சிரித்தார்கள். குழந்தைகளும் தாங்கள் எத்தனையாவது என்பதை தெரிந்து கொள்ளும் ஆவலில் வீடு சென்றனர்.
எங்கள் வீட்டு கடைக்குட்டி ராசேசு லேட்டா வந்தாலும்.....

Thursday, October 14, 2010

தம்பிக்காக எதையும் செய்யும் அண்ணன்

அண்ணனுக்கு தியாகம் செய்யும் தம்பி

என்னை போல் ஒருவன் என்றால் அது இவன் தான்
சிவன் பேர் கொண்ட இவன் ராஜாவின் மவன்

'தாய் உரைகொண்டு தாதை உதவிய தரணிதன்னை,
தீவினை என்ன நீத்து, சிந்தனை, முகத்தில் தேக்கி,
போயினை என்றபோழ்து, புகழினோய்! தன்மை கண்டால்,
ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ, தெரியின் அம்மா

என்ற பாடலுக்கு பொருத்தமானவன்

தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்றாலும் இவன் ஞாபகம் வரும்

தம்பி! டீ இன்னும் வரல என்றாலும் இவன் ஞாபகம் வரும்

வாழ்க நீ தம்பி!

Magesh Blog

Saturday, April 24, 2010

நாடோடிகள் எனும் சகோதர சகோதரிகள்



நேற்று இரவு வந்த ஒரு குழு
அழகான ஆர்பாட்டம் கூத்தாட்டம் கும்மாளம்
அந்த ஏழ்மையின் கவர்ச்சியை ரசிக்க ஒரு கூட்டம்
ஏன் இவர்கள் பட்டம் பெற இந்த கூட்டம் உதவவில்லை

காட்டிலே வேட்டை கடந்து
நாட்டிலே போட்ட கூத்து
ரோட்டிலே வித்தை செய்ய
வீட்டிலே மாடி மேல் நின்று வீசும் காசு போறாது
இவர்கள் வீடு பெற வழி செய் அரசே

இவர்கள் பல கற்றுள்ளது இதுவும் திறமைதான்
கணிபொறி கற்கும் திறன் இருந்தும்
பிறந்த சூழலே இவர்கள் இஞக்னம்
மாறும் நாள் தொலைவில் இல்லை
என்றெண்ணி விழித்தெழுந்து பார்க்கையில்

அங்கவர்கள் இல்லை வெறும் மரத்தடிதான்
காய்ந்த சருகுகளும் எறிந்த கரியடுப்பும்
பரந்த வெளியில் பார்த்த காட்சி
பறந்ததோ பட்சிகள்
அடுத்த முறை பார் அவர்களும்
அரசர்கள் போல் ஆவார்கள்
என்றெண்ணி அமர்ந்தேனடா


Thursday, April 1, 2010

கதம்பம்


என் உடலே பணியில் உறைந்தாலும்
ஏனோ இதயம் மட்டும் ஓவனை போல்...
oh உனை சுமப்பதாலோ

பாதங்கள் பாடாய் படுத்துகின்றன
oops my bad
இப்போது புரிகிறது
நீ என் மனதில் marathon அல்லவா செய்கிறாய்

Death bedல் நான்..
உன் பாதம் பட்டதே எனக்கு CPR

காண முயல் எய்த அம்பினில் யானை பிழைத வேல் ஏந்தல் இனிது
Bluecrosskku யார் பதில் சொல்வது